For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஜி தீவில் புயல் தாண்டவம்... தீவுகள் மூழ்கும் அபாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Fiji
பிஜி: பசிபிக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி புயல், பிஜி தீவை கடுமையாகத் தாக்கியுள்ளது.புயலின் கோரத்தாண்டவத்தினால் அங்குள்ள குட்டித்தீவுகள் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.

பசிபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால், பிஜி தீவில், 300 கி.மீ.,வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. புயல் வீச துவங்கியதும், ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. பெரும்பாலான பகுதிகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால், அந்நாட்டின், விமான சேவை, ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மலை பகுதிகளில் நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200 மையங்களில், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பசிபிக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி புயல், பிஜி தீவை தாக்கியுள்ளது.பசிபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால், பிஜி தீவில், 300 கி.மீ.,வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால், அந்நாட்டின், விமான சேவை, ரத்து செய்யப்பட்டுள்ளது.புயல் வீச துவங்கியதும், ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. பெரும்பாலான பகுதிகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மலை பகுதிகளில் நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200 மையங்களில், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பிஜி தீவில் சுற்றியுள்ள குட்டி தீவுகள், இந்த புயலால் மூழ்கும், அபாயம் உள்ளதாக, வானிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

புயல் பாதிப்பினால் இதுவரை, நான்கு பேர் பலியாகியுள்ளனர். எட்டு பேரை காணவில்லை. புயல் பாதிப்பை சமாளிக்க, தேவையான உதவிகளை வழங்கும் படி, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து நாடுகளின் உதவியை, பிஜி தீவின் ராணுவ தலைவர், வொரிக் பைனிமராமா கோரியுள்ளார்.

English summary
Fijian authorities have warned people to prepare as Cyclone Evan lashes the Pacific nation, packing very high winds.Flights to and from Fiji were cancelled as the category four storm approached from the north.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X