For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்ப ஹிலாரி… இப்போ ராம்னி… முகமூடி கொள்ளையனின் பலே திட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வெர்ஜினியா: அமெரிக்காவில் மிட் ராம்னி போல முகமூடி அணிந்த நபர் வங்கியில் புகுந்து துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கி கிளை உள்ளது. செவ்வாய்கிழமையன்று இந்த வங்கிக்கு குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ராம்னியைப் போல முகமூடி அணிந்த நபர் வந்தார். அந்த மர்ம நபர் புளோரிடா மாகாண கொடியை போல சட்டையும் அணிந்திருந்தார்.

அந்த நபர் வங்கியில் இருந்த 5 கவுண்டர்களில் இருந்த ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். வங்கி ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சமீபத்தில் ராம்னி முகமுடி வாங்கியவர் யார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டு இதே வங்கியின் கிளை ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் முகமுடி அணிந்து வந்து பணத்தைக் கொள்ளயடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. .

English summary
In one more insulting blow to Mitt Romney's bad year, a man wearing a mask designed to look like the former presidential candidate robbed a Virginia bank outside of Washington D.C. Thursday — the same bank hit by a robber in a Hillary Clinton mask two years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X