For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 24 பேரின் கருணை மனு டிஸ்மிஸ்- 13 பென்டிங்

By Mathi
Google Oneindia Tamil News

Mercy Petition
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 24 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக உள்துறை இணை அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 24 பேரின் கருணை மனுக்கள் அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப்பின் கருணை மனுவும் அடக்கம். கசாப் கடந்த மாதம் 21-ந் தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

இன்னும் 13 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட அப்சல் குரு மற்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனா ஆகியோரது கருணை மனுக்கள் அடக்கம் என்றார் அவர்.

மேலும் அரசியல் சாசனப் பிரிவு 72-ன் கீழ் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

English summary
As many as 24 mercy petition cases have been disposed of since 2009 while 13 are still pending with the government, Parliament was told on Tuesday. Among the 24 mercy petitions that have been disposed of is that of Mohammed Ajmal Amir Kasab - the last 26/11 terrorist who was executed on November 21 in Pune's Yerwada Prison - Minister of State for Home M Ramachandran told the Lok Sabha in response to a question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X