For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

By Siva
Google Oneindia Tamil News

பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிமீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் சக்தி கொண்ட பிரித்வி 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஏற்கனவே ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள பிரித்வி 2 ஏவுகணை இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒடிசா மாநிலம் சண்டிபூர் அருகே உள்ள பலசூர் ஏவுகணை தளத்தில் இருந்து பிரித்வி 2 இன்று காலை 9.21 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதிநவீன ஏவுகணையான பிரித்வி 2 சுமார் 500 முதல் 1000 கிலோ வரையிலான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிமீ தொலைவில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வல்லமை வாய்ந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி பிரித்வி ஏவுகணை சோதனை கடைசியாக நடத்தப்பட்டது. இந்தியா அவ்வப்போது ஏவுகணைச் சோதனை செய்வது போன்று பாகிஸ்தானும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India on Thursday successfully test-fired its indigenously developed nuclear capable Prithvi-II missile with a strike range of 350 km from a test range at Chandipur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X