For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரூ846 கோடி இழப்பு -சிபிஐ குற்றப்பத்திரிகை

By Mathi
Google Oneindia Tamil News

2g Scam
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ846 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது ஏர்டெல், வோடஃபோன் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது என்பது புகார். இதனால் அரசுக்கு ரூ.846 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏர்டெல், வோடஃபோன் இந்தியா, ஹட்சிசன் மேக்ஸ், ஸ்டெர்லிங் செல்லுலார், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் ஷியாமல் கோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் மறைந்த பிரமோத் மகாஜன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது.

English summary
The CBI on Friday filed another charge sheet in the spectrum allocation scandal, alleging a criminal conspiracy dating to the BJP-led National Democratic Alliance rule, which has caused the Indian Government a loss to the tune of Rs. 846.44 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X