For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்ஜியாவில் மீண்டும் நிறுவப்பட்ட ஸ்டாலின் நினைவகம்!

By Mathi
Google Oneindia Tamil News

Stalin monuments
ட்ப்லிஸி: ரஷிய சர்வதிகாரி ஸ்டாலினின் சிலை ஜார்ஜியாவில் மீண்டும் நிறுவப்பட்டிருக்கிறது.

ஜார்ஜியாவில் சமூக அரசியல் குழப்பங்கள் அதிகரிட்து வருகிறது. 1921-ம் ஆண்டு ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சோவியத் ரஷியாவின் செஞ்சேனை ஜார்ஜியாவை கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

பின்னர் 1990களின் தொடக்கத்தில் கோர்ப்பசேவ் அதிபராக இருந்தபோது சோவியத் ரஷியா, தனித் தனிநாடுகளாக பிரிந்து போயின. கடந்த ஆண்டு ஜார்ஜியாவில் சோவியத் ரஷியாவை நினைவூட்டக் கூடிய அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 'சோவியத் ஆக்கிரப்பு நாள்" ஒன்றும் பிரகடனம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது. நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான பிட்ஜினா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அதிபராக சகாஷ்வில் நீடித்து வருகிறார். சகாஷ்வில் ரஷிய எதிர்ப்பாளர் என்பதால் ஸ்டாலினின் சொந்த ஊரான ஜார்ஜியாவின் கோரியில் ஸ்டாலின் சிலையை அகற்றவும் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது புதிய அரசு அமைந்திருப்பதால் அகற்றப்பட்ட நினைவகம் மீண்டும் கோரியில் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது

அதற்கு முன்பாக அல்வனி என்ற கிராமத்தில் ஜார்ஜியாவின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டாலின் சிலையும் நினைவகமும் திறக்கப்பட்டிருக்கிறது.

English summary
A monument to the Georgian-born Soviet dictator Joseph Stalin was restored in the Georgian village of Alvani on Friday in a bid to discredit the authority of President Mikhail Saakashvili, who had it removed from its original place. "We should not forget our past, we should not forget Stalin." Grigol Oniani, leader of Georgia's Communist Party, told AFP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X