For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட, லைக் கொடுக்க முடியல

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட்டதற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காகவும் 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது பலரை ஆத்திரமடையச் செய்தது.

சிவ சேனா தலைவர் பால் தாக்கரே கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி இறந்தார். மறுநாள் அவரது இறுதிச் சடங்கு நடந்தபோது மும்பையில் நடைபெற்ற பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட ஷாஹின், அதற்கு லைக் கொடுத்த ரேணு சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு கமெண்ட் கூட போடக்கூடாதா?

ஒரு கமெண்ட் கூட போடக்கூடாதா?

கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட்டதற்காக மகாராஷ்டிரா மாநிலம் பால்கரைச் சேர்ந்த ஷாஹின் மற்றும் அவரது கமெண்டிற்கு லைக் கொடுத்த ரேணு சீனிவாசன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஷாஹின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கிய சிவ சேனா தொண்டர்கள்

ஷாஹின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கிய சிவ சேனா தொண்டர்கள்

அது எப்படி பால் தாக்கரே பற்றி கமெண்ட் போடலாம் என்று கூறி சிவ சேனா தொண்டர்கள் பால்கரில் உள்ள ஷாஹினின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கினர். இதனால் ஷாஹின் குடும்பத்தார் மிரண்டு போனார்கள்.

இனி ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டோம்

இனி ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டோம்

ஜாமீனில் வெளியே வந்த இரு பெண்களும் இனி ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டோம் என்று தெரிவித்தனர். அவர்கள் கைதாகும் வரை ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டால் போலீசார் கைது செய்வார்கள் என்று யாருக்குமே தெரியாது.

மகாராஷ்டிராவை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய ஷாஹின்

மகாராஷ்டிராவை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய ஷாஹின்

இனியும் பால்கரில் இருந்தால் சிவ சேனா தொண்டர்கள் தங்களை நிம்மதியாக வாழவிட மாட்டார்கள் என்று ஹாஹின் தன் குடும்பத்தாரோடு மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி குஜராத்தில் தஞ்சம் புகுந்தார். ரேணு சீனிவாசன் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கப் போகிறார்.

தாக்கரே பற்றி கமெண்ட் போட்டால் கைது நிச்சயம்

தாக்கரே பற்றி கமெண்ட் போட்டால் கைது நிச்சயம்

பால் தாக்கரேவின் உறவினரும், நவநிர்மன் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவி்க்கப்பட்டார்.

English summary
When 2 young girls were detained for posting and giving like to a comment against Shiv Sena leader Bal Thackeray in facebook, the whole of India asked the question 'do we really have the freedom of speech and expression?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X