For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத் தாக்குதலில் தலிபான் தலைவரைக் கொன்றாரா இளவரசர் ஹாரி?

Google Oneindia Tamil News

Prince Harry
லண்டன்: ஆப்கானிஸ்தானில் நடந்த விமானத் தாக்குதலின்போது இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஒரு தலிபான் கமாண்டரை கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு விமானப்படை வீரராக அவர் எடுத்த முதல் உயிர் இது என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து மீடியாக்கள் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன. 27 வயதான ஹாரி, இங்கிலாந்து வி்மானப்படையில் பணியாற்றுகிறார். தற்போது அவர் ஆப்கானிஸ்தான் பணியில் ஈடுபட்டுள்ளார். நேட்டோ படையில் இணைந்து செயல்பட்டு வரும் ஹாரி, முதல் முறையாக விமானத் தாக்குதலில் ஈடுபட்டார் என்றும், அதில் ஒரு முக்கிய தலிபான் தலைவரைக் கொன்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற ஹாரி, அங்கு 100 எல்பி ஹெல்பையர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு விமானத் தாக்குதலில் ஹாரி ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். மேலும் முதல் தாக்குதலிலேயே அவர் தலிபான் தலைவர் ஒருவரைக் கொன்றதாக செய்திகள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் அக்டோபர் மாதம் இறுதியில் நடந்ததாக டெய்லி மெயில் செய்தி தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஹாரி யாரைக் கொன்றார் என்பது குறித்து எந்தத் தகவலையும் இங்கிலாந்து விமானப்படையோ, ராணுவமோ இதுவரை தெரிவிக்கவில்லை.

English summary
Prince Harry who is an RAF helicopter pilot deployed in Afghanistan, has killed a Taliban leader in an airstrike, notching up his first 'kill', British media reported today. The 27-year-old, the third in line to the British throne, was called in to provide air support to troops tracking a commander-level Taliban chief and hit the target with a 100 lb Hellfire missile fired from an Apache helicopter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X