For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மகள் போனுக்கு பசங்க கிட்டேருந்து ஒரே போனா வருது... ஒபாமா தகவல்

Google Oneindia Tamil News

Barack Obama with Family
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் டீன் ஏஜ் மகள் மலியா கையில் செல்போனை கொடுத்து விட்டார்கள் அவரது பெற்றோர். போன் கைக்கு வந்தது முதல் அவருக்கு நிறைய டீன் ஏஜ் பசங்களிடமிருந்து போனாக வந்தவண்ணம் இருக்கிறதாம். தந்தை ஒபாமாவும் தாயார் மிஷலும் இதைச் சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர்கள் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

இபோது மலியாவுக்கு செல்போன் கொடுத்து விட்டோம். ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் 'நீண்ட கயிறு' கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம்.

அதேசமயம், அதிபர் மாளிகையில் வசிப்பதால், செல்போன் பேச்சுக்கள் நிச்சயம் கண்காணிக்கப்படும் என்றார் மிஷல்.

அப்போது குறுக்கிட்ட ஒபாமா, எனது மகள்கள் பெரிய பொய் சொல்லிகள் என்று கூற முடியாது. பெரும்பாலும் உண்மயைத்தான் பேசுவார்கள். எனது மகளுக்கு இப்போது அவரது ஆண் நண்பர்களிடமிருந்து நிறைய போன் அழைப்புகள் வருகின்றன என்றார் சிரித்தபடி.

இந்த பேட்டியின்போது தங்களது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை குறித்தும் ஒபாமாவும், மிஷலும் பேசினர்.

English summary
US President Barack Obama and the First Lady Michelle Obama opened up about some of their personal experiences in the White House in an interview with ABC News' Barbara Walters broadcast on Wednesday. The President and First Lady described parts of their family life, including that their daughter Malia now has a mobile phone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X