For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரும் துரை தயாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Durai dayanidhi
மதுரை: தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மனு தாக்கல் செய்துள்ளார்.

கிரானைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த துரை தயாநிதி, தற்போது நிபந்தனை முன் ஜாமீனில் உள்ளார். இதன்படி அவர் தினமும் கீழவளவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

இந்நிலையில், காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வரும் தன்னை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் விதத்தில் நடப்பதாகவும், இதனால் தன்னுடைய அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார்.

English summary
Durai Dayanidhi, son of union minister M K Azhagiri has filed a petition in court asking for a relaxation in preventive bail conditions in Granite scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X