For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர்களெல்லாம் வாழவே தகுதியில்லாதவர்கள்... கற்பழிப்பு குற்றவாளிகள் குறித்து பிரதீபா பாட்டீல்

Google Oneindia Tamil News

Pratibha Patil
புனே: டெல்லியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேருமே வாழத் தகுதியவற்றவர்கள் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கோபத்துடன் கூறியுள்ளார்.

டெல்லி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி உயிரிழந்த மாணவி குறித்து பிரதீபா பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த செயல் மிகவும் கொடுமையானது, அதிர்ச்சிகரமானது, கண்டனத்துக்குரியது. இந்த செயலையச் செய்த யாருமே வாழத் தகுதியவற்றவர்கள். அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு உரிமையே கிடையாது.

மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம் இது. என்னைப் பொறுத்தவரையில் இந்த செயலில் ஈடுபட்ட யாருமே வாழும் உரிமையில் இல்லை. அவர்கள் வாழக் கூடாது.

தூக்குத் தண்டனை குறித்து பல்வேறு விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அரிதிலும் அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் சமூ்க அளவிலும், காவல்துறையினரின் மனதளவிலும் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பாக ஆண்களின் மனோபாவம் முற்றிலும் மாற வேண்டும். பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் தேவை. அப்போதுதான் இதுபோன்ற தீய செயல்களை நாம் முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும் என்றார் அவர்.

English summary
Condoling death of the 23-year-old Delhi gangrape victim, former President Pratibha Patil has said the perpetrators of the crime "had no right to live ". "As the case falls under the rarest of rare category, in my opinion the guilty had no right to live," she told a Marathi news-channel this evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X