For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொச்சி மசூதியில் கசாப் ஆன்மா சாந்தியடைய தொழுகையா? புதுசர்ச்சை

By Mathi
Google Oneindia Tamil News

Kasab
கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே திரிக்கக்கரா மசூதியில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் ஆன்மா சாந்தி அடைய தொழுகை நடத்தப்பட்டதாக புது சர்ச்சை வெடித்திருக்கிறது.

நவம்பர் மாதம் 21-ந் தேதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டட பின்னர் 23-ந் தேதியன்று வெள்ளிக்கிழமை தொழுகை அந்த மசூதியில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது கசாப் பெயரும் ஆன்மா சாந்தி அடைவோரின் பட்டியலில் இணைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பொறுப்பானவரான அப்துல் ரவூப் என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் சர்ச்சைக்குரிய ரவூப்போ தாம் அப்படிச் செய்யவில்லை என்றும் தொழுகை நடந்த போது இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவர்கள் கசாப் பாதையில் செல்லக் கூடாது என்றே வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் இரண்டு பிரிவுகளுக்கு இடையேயான மோதலில் தாம் பலியாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

செத்தும் ஓயாத அலையோ கசாப்?

English summary
The managing committee of a Jama'at mosque here has initiated disciplinary action against its khatib (preacher leading Friday prayers) for allegedly praying for salvation of the soul of Ajmal Kasab two days after the terrorist was hanged in Pune's Yerwada Central Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X