For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா 2012வுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் தேசிய நீர் சட்ட வரைவு மசோதாவில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதால் நாடெங்கிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மண், பொன், பெண் இந்த மூன்று பொருளுக்காக எத்தனையோ போர்கள் நடைபெற்றுள்ளன. இனி ஒரு போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவிலேயே அண்டை மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கிடுவதில் பிரச்சினை உள்ளது.

நம் ஊரில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி கோடி கோடியாய் சம்பாதிக்கும் அந்நியர்கள் இன்றைக்கு இருக்கின்றனர். எனவே தண்ணீரை பாதுகாக்க மத்திய அரசு சில முடிவுகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. தண்ணீர் கூட தனியார் மயமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நிலத்தடி நீர் பாதுகாப்பு

நிலத்தடி நீர் பாதுகாப்பு

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும். அதனால் தேசிய நீர் வளக் கொள்கை, 2012 அறிமுகப் படுத்தப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நீர் வள கவுன்சில் கூட்டத்தில் தேசிய நீர் சட்ட வரைவு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீருக்கு கட்டணம்

நிலத்தடி நீருக்கு கட்டணம்

தண்ணீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்க வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த கட்டண விகிதம் ஆண்டுதோறும் மாற்றப்பட வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.

தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்

தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்

அந்தந்த பகுதிகளில் ‘‘ தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்‘‘ என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு

ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு

ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்தி, நீர் நிலைகளில் நீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும்.

தண்ணீர் மாசுபடுவதை தடுக்க

தண்ணீர் மாசுபடுவதை தடுக்க

தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரின் நீரோட்ட கோணத்தை மாற்றக்கூடாது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை உறுதி செய்ய வேண்டும். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.

தண்ணீர் விநியோகம் தனியார் மயம்

தண்ணீர் விநியோகம் தனியார் மயம்

தண்ணீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தவே நீர்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி தண்ணீரை வர்த்தக பொருளாக கருதலாம். தண்ணீர் குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தாலும் தேசிய அளவிலான பொதுக் கொள்கை உருவாக்கப்படும்.

அதே நேரம் மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது. தண்ணீரை விநியோகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவை அரசு வகுத்துள்ளது.

விவசாயிகளுக்கு பாதிப்பு

விவசாயிகளுக்கு பாதிப்பு

இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பதும், தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும். இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயம் கூடாது

விலை நிர்ணயம் கூடாது

வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் போன்ற கருத்துகள் நீர் கொள்கை 2012 ல் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த தேசிய நீர் வளக்கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பேசும்போது, தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

English summary
The National Water Resources Council has adopted National Water Policy-2012 its meeting. Prime Minister Dr. Manmohan Singh, in his inaugural address, called for a judicious management of limited water resources. He said there is a need to take steps to minimize misuse of groundwater by regulating the use of electricity for its extraction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X