For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷெட்டர் அரசை கவிழ்ப்பது குறித்து நாளை இறுதி முடிவு: எதியூரப்பா தகவல்

By Siva
Google Oneindia Tamil News

Yeddyurappa
பெங்களூர்: ஷெட்டர் அரசை கவிழ்ப்பதா வேண்டாமா என்பது குறித்து ஜனவரி 4ம் தேதி பெங்களூரில் நடக்கும் தங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஷெட்டரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சில பாஜக தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஷெட்டர் அரசை கவிழ்ப்பதா வேண்டாமா என்பது குறித்து வரும் 4ம் தேதி பெங்களூரில் நடக்கும் எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். எனக்கு நெருக்கமாக இருக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தாலும் அரசுக்கு பாதிப்பில்லை என்று சதானந்த கவுடா கூறியது பற்றி கவலை இல்லை. அவர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.

சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார்.

எதியூரப்பாவின் ஆதரவாளரான பாஜக எம்.எல்.ஏ. நேரு ஒலேகர் கூறுகையில், ஷெட்டர் அரசு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு கவிழும். 25 முதல் 30 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர். இது குறித்து வரும் 4ம் தேதி நடக்கும் கர்நாடக ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

English summary
KJP chief Yeddyurappa told that his party will decide whether to bring down Shettar government or not at the executive committee meeting to be held in Bangalore on january 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X