For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் முதல் யூனிட் 2 வாரத்தில் உற்பத்தியை தொடங்கும்-அணு சக்திக் கமிஷன்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இன்னும் 2 வாரங்களில் கூடங்குளம் முதல் யூனிட்டில் அணு மின் உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணு சக்தி கமிஷனின் தலைவர் ரத்தன் குமார் சின்ஹா கூறியுள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்னும் 2 வாரங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்து கூடங்குளம் முதலாவது அணு மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கும். 100 சதவீதம் தொடங்கி விடும். முதல் யூனிட்டில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

அனைத்தும் சிறப்பாக நடந்தேறும் வகையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் சரியாக உள்ளதா என்ற பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார் அவர்.

மொத்தம் 2 அணு மின் உற்பத்தி நிலையங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The much-delayed Kudankulam project is set to be commissioned within the next two weeks as nuclear scientists have entered the final lap of a series of tests on its safety and efficacy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X