For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்கடலோர தமிழகத்தில் இன்று மழை பெய்யலாம்: சென்னையில் இல்லை

By Siva
Google Oneindia Tamil News

Rain
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் கடலோர தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. இந்நிலையில் அவ்வப்போது உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகத் தான் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தென் கடலோரத்தில் உள்ள தமிழக பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிற பகுதிகள் மற்றும் புதுவையில் வறணட் வானிலை தான் நிலவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெட்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Chennai meteorological centre announced that southern coastal areas of Tamil Nadu will get rain today because of the new low pressure in the Bay of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X