For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா கிளர்ச்சியில் இதுவரை 60,000 பேர் மரணம்: ஐ.நா தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் 2012ம் ஆண்டு முடிவு வரை 60,000 கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிரியா அதிபர் ஆசாதிற்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போராட்டம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் தினசரி நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர்.

2011-ம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டோர்கள் பற்றிய விவரங்களை ஐ.நா. அமைப்பால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் இதுவரை 60000-க்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த நவம்பர் மாதம் வரை 59,648 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. 2013-ம் ஆண்டு தொடக்கம் வரை 60,000-க்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிரியா உள்நாட்டுப்போரின் தொடங்கியதிலிருந்து இதுவரை கிடைத்த தகவல்களை பார்க்கிறபோது அங்கு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 1000 பேரிலிருந்து, 5,000 பேராக அதிகரித்து இருக்கிறது." என நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

English summary
The overall death toll in devastated Syria has surpassed an estimated 60,000 people, the United Nations said Wednesday, a dramatic figure that could skyrocket as the civil war persists. To put it in perspective: 60,000 people is roughly the population of Terre Haute, Indiana; or Cheyenne, Wyoming. It's how many people would fit in Dodger Stadium, and it's more than the 50,000-plus U.S. combat deaths in Vietnam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X