For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவு- தமிழக அரசு நடவடிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவற்றை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணமாக இருப்பது மதுக்கடைகளேதான். இதனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து முதல் மாநிலமாக தமிழக அரசு இவற்றை அகற்றி வேறு இடங்களில் மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உடனே அனைத்து கடைகளையும் அகற்றினால் வருமான இழப்பு ஏற்படும் என்பதால் படிப்படியாக இவற்றை அகற்ற அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 500 கடைகள் அகற்றப்பட இருக்கின்றன.

English summary
No more can you hop into a highway liquor shop to down a couple of pegs while driving down national highways in Tamil Nadu. Among the first to react to a circular from the Union ministry of road transport and highways, which advised all the states to close down liquor shops on national highways to bring down accidents due to drunken driving, the Tamil Nadu government has decided shift them all to other locations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X