For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: தமிழர் பகுதியில் சிங்களம் கற்பிக்க ராணுவத்தினர் ஆசிரியர்களாக நியமனம்- கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

இலங்கை: தமிழர் பகுதியில் சிங்களம் கற்பிக்க ராணுவத்தினர் ஆசிரியர்களாக நியமனம்- கடும் எதிர்ப்பு

வவுனியா: இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள மொழி கற்பிக்க ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையின் தமிழர் பிரதேசமான வடக்கில் சிங்கள மொழியை கற்பிக்க ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பள்ளிகளையும், ராணுவ மயமாக்கும் ஒரு நடவடிக்கையாக இது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதை இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரியா மறுத்துள்ளார். அதே நேரத்தில் கிளிநொச்சி கல்வி மாவட்டத்தில் கணிதம், அறிவியல், சிங்களம் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ராணுவத்தினரை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது என்றும் ராணுவ தரப்பு கூறியுள்ளது.

English summary
Sri Lanka government has appointed its military to teach Sinhala as second language to Tamil school children in Vanni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X