என் மகன் துரைதயாநிதியும் அரசியலில் ஈடுபடுவார்: மு.க. அழகிரி அறிவிப்பு

நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு மு.க. அழகிரி அளித்த பேட்டியில், துரை தயாநிதியும் தீவிர அரசியலில் ஈடுபடுவார். அதில் எந்தத் தவறும் இல்லை. அவரை நிம்மதியாய் தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். எனவே அவர் அரசியலில் தீவிரம் காட்டப்போகிறார் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் விரும்பினால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த துரைதயாநிதி, எங்க தாத்தாவைப் பார்த்துதான் எனக்கு கரை வேட்டி கட்டும் ஆசையே வந்தது. அப்பா விரும்பியதுபோல் நடப்பேன். அப்பா என்னை எம்.பி. தேர்தலில் நிற்கச் சொன்னாலும் நிற்பேன் என்றார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று கருணாநிதி அறிவித்ததற்கு முன்பாக ஜனவரி 1-ந் தேதியன்று அழகிரி கொடுத்த பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!