For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 வரிகளில் கடிதம் எழுதி கருணை காட்டக் கோரிய கசாப்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Kasab Letter
டெல்லி: மும்பையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுக் கைதாகி சிறைவாசம் அனுபவித்து பின்னர் கடந்த ஆண்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு வெறும் நான்கு வரிகளில் இருந்தது தெரிய வந்துள்ளது.

உருதில் தனது கைப்பட இந்த கருணை மனு கடிதத்தை எழுதியிருந்தான் கசாப். அந்த கடித விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

2012ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது கசாப் தூக்கிலிடப்பட்டு ஒரு மாதம் முடிந்த நிலையில் அது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளுடன் கொச்சையான உருதில் மனுவை எழுதியுள்ளான் கசாப்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கருணை மனுவை பெற்றுள்ளார் லக்னோவைச் சேர்ந்த ஊர்வசி சர்மா என்ற சமூக நல ஆர்வலர்.

அக்கடிதத்தில் கசாப் கூறுகையில், ஐயா, சுப்ரீம் கோர்ட் எனக்கு மரணமடையும் வரை தூக்கிலிடும் தண்டனையை விதித்துள்ளது. இதிலிருந்து எனக்கு விலக்கு அளித்து, என்னை தூக்கிலிடுவதிலிருந்து காக்குமாறு மிகவும் பணிவுடன், மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். இது எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறியுள்ளான் கசாப்.

இந்தக் கருணை மனுவைத்தான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012, நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார். இதையடுத்து நவம்பர் 21ம் தேதி புனே சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

English summary
Ajmal Kasab, the face of the dastardly 26/11 terror strike on Mumbai who was hanged, had begged for "daya" (mercy) from the President through his four-line clemency plea written in elementary Urdu. The hand written petition dated September 12, 2012, which has been made public more than a month after Kasab was hanged, shows glaring Urdu language errors. The application has been provided to Lucknow-based activist Urvashi Sharma under the Right to Information Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X