For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுங்காலமாக தவறவிட்ட இந்திய சாப்ட்வேர் சந்தையை குறி வைக்கும் இன்போசிஸ்

By Chakra
Google Oneindia Tamil News

infosys
பெங்களூர்: நீண்ட காலமாக தவறவிட்டுவிட்ட இந்திய சாப்ட்வேர் சந்தையை இன்போசிஸ் குறி வைக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தான் தனது மொத்த வருமானத்தில் 85 சதவீத வருவாயை இன்போசிஸ் ஈட்டுகிறது. அதன் மொத்த வருவாயில் 1.9 சதவீதம் மட்டுமே இந்தியாவில் ஈட்டப்படுகிறது. இதிலும் கூட 90 சதவீதம் அரசுத் துறை காண்ட்ராக்ட்கள் மூலமே கிடைக்கிறது.

ஆனால், அரசுத் துறையில் காண்ட்ராக்ட்கள் கையெழுத்தாகவும், திட்டங்கள் அமலுக்கு வரவும் மாபெரும் காலதாமதங்கள் ஏற்பட்டு வருவதால், இதைத் தவிர்த்துவிட்டு இந்தியாவின் தனியார் துறையினரின் சாப்ட்வேர் காண்ட்ராக்ட்களைப் பெற இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் டிசிஎஸ் தான் முன்னிலையில் உள்ளது. அதன் இந்திய சாப்ட்வேர் சந்தையின் அளவு 810 மில்லியன் டாலர்களாகும். ஆனால், இன்போசிஸ் இந்திய சந்தையில் ஈட்டும் வருவாய் 135 மில்லியன் டாலர்கள் மட்டுமே. அதே போல விப்ரோ, ஐபிஎம் போன்றவையும் இன்போசிஸை விட வலுவாகவே இந்திய சந்தையில் கால் ஊன்றிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அரசுக் காண்ட்ராக்ட்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு, தனியார் துறையின் சாப்ட்வேர் திட்டப் பணிகளில் கவனம் செலுத்த இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் எரிசக்தித் துறை, தொலைத் தொடர்புத்துறை, ரீடெய்ல் துறை ஆகிய துறைகளில் அதிக காண்ட்ராக்ட்களைப் பெற இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது.

English summary
Infosys is changing course in its India business to focus more on deals from corporations rather than government, which now contributes about 90% to the company's revenue in its home market. The government takes a long time to finalise contracts and implementation cycles are long, adding to the pressure on Infosys, which is looking to make up for project delays and cancellations in its main markets - the US and Europe - from where it earns about 85% of its income.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X