For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி 'எக்பீரியன்ஸ் சர்டிபிகேட்' ஆசாமிகளை காட்டுக் கொடுக்க போகும் 'பயோமெட்ரிக் புரொபைலிங்'!

By Chakra
Google Oneindia Tamil News

Biometric Profiling
பெங்களூர்: சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கல்விச் சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ்கள், அவர்களது கைரேகைகள், கண் விழித்திரை அமைப்பு ஆகியவை அடங்கிய விவரக் குறிப்புகள் சேகரிக்கப்பட்டு, ஒரு மையப்படுத்தப்பட்ட சர்வரில் சேமிக்கப்படவுள்ளன.

இதன்மூலம் போலி கல்விச் சான்றிதழ்கள், போலியான அனுபவ சான்றிதழ்கள் (EXPERIENCE CERTIFICATE), ஆள்மாறாட்டம் செய்து வேலைகளில் சேருவது போன்றவற்றைத் தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் முதலில் பெங்களூரில் அறிமுகமாகவுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் மனிதவளப் பிரிவின் தலைவர் மோகன்தாஸ் பை தலைமையில் அமைத்த Karnataka information technology group (KIG) இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.

வழக்கமாக ஒரு ஊழியரை பணியில் சேர்க்கும்போது அவர் தரும் விவரங்களை, குறிப்பாக அனுபவ சான்றிதழ்களை, அந்த நிறுவனங்கள் தனியார் ஏஜென்சிகள் மூலம் சரிபார்க்கின்றன. இருப்பினும் முறைகேடுகளில் ஈடுபடும் பிராடுகளை முழு அளவில் தடுக்க முடியவில்லை.

இந் நிலையில் தான் இந்த பயோமெட்ரிக் விவர சேகரிப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது கே.ஐ.ஜி. இதே போன்ற ஒரு திட்டத்தை தேசிய அளவில் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களிலும் கொண்டு வர நாஸ்காம் அமைப்பும் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு தான் முதலில் அமலாக்கும் என்று தெரிகிறது. தற்போது பெங்களூரில் மட்டும் சுமார் 8.5 லட்சம் சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Karnataka government panel has proposed biometric profiling of all IT professionals in the State to catch anyone providing false credentials about education and experiance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X