For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களக்காடு அருகே சூறைக்காற்று: 2,000 வாழை மரங்கள் சாயந்தன

Google Oneindia Tamil News

நெல்லை: களக்காடு அருகே வீசிய சூறைக்காற்றால் விவசாயி ஒருவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த 2,000 வாழை மரங்கள் சாய்ந்தன.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிவபுரம், கள்ளியாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தவசிக்கனி என்பவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த 2,000 வாழைகள் சாய்ந்தன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

காட்டுயானைகள், வன விலங்குகள் அவ்வப்போது மலையடிவாரப் பகுதி தோட்டங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.மழை சரியாக பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றனர்.

English summary
Strong winds near Kalakkad affected plantains which made the farmers to shed tears.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X