For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று 100 நாளை 1000: அதிமுக அரசின் பலே திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு அரிசி, வெல்லம், ரூ.100 ரொக்கம் அளித்து வருகிறது தமிழக அரசு. ஆனால் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் பண்டிகையின்போது ரூ.1,000 வழங்க திட்டமிட்டுள்ளதாம்.

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடும் மின்வெட்டால் தமிழக அரசுக்கு சாபம் விடும் பொது மக்கள் மனதை குளிர வைக்கும் வகையில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி, வெல்லம், ரூ.100 ரொக்கப் பணத்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அப்போது பொது மக்கள் கொண்டாடும் பண்டிகை ஏதும் வந்தால் அதை சாக்காக வைத்து பலவித இலவச பொருட்களுடன் ரூ. 1000 வரை கொடுத்து அசத்த அரசு தயாராகி வருவதாக அரசல்புரசல் பேச்சு கிளம்பியுள்ளது.

இதை கேள்விப்பட்டு கிலியாக்கிப் போன திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40ம் நமதே என இருந்தோம். அதில் விரிசல் விழும்போல் இருக்கின்றதே என இப்போது முதல் சட்ட ஆலோசகர்களை அழைத்து கருத்து கேட்டு வருகின்றார்களாம்.

English summary
ADMK government is allegedly planning to give freebies along with Rs. 1,000 cash to the people if any festival comes close to the date of the parliament election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X