For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க 'டுபாக்கூர்' பத்திரங்கள்.. 'கடலை' ராமலிங்கம் முன் ஜாமீன் வாங்கினார்..

By Chakra
Google Oneindia Tamil News

Ramalingam
சென்னை: ரூ.28,000 கோடி போலி அமெரிக்க பத்திரங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய வரும் 21ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

போலியான பத்திரங்களை வைத்திருப்பது குற்றச் செயல் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வருமான வரித்துறையினர் போலீசாரிடம் கோரலாம் என்று தெரிகிறது.

தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரியான ராமலிங்கம் (47) வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28,000 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கின.

ஆனால், இவை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

போலியான பத்திரங்களை வைத்திருப்பது குற்றச் செயல் என்பதால், இது குறித்து வருமான வரித்துறையினர் போலீசாருக்கு புகார் தந்து வழக்குப் பதிவு செய்யலாம்.

இந் நிலையில் தான் கைதாகலாம் என அஞ்சும் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இவரை வரும் 21ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த அமெரிக்க கருவூல பத்திரங்கள் உண்மையானவை என்று கூறி வரும் ராமலிங்கம் அதை நிரூபித்தால், அதற்கான வரியைக் கட்டுமாறும் அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான வரி 30 சதவீதம் வரை, அதாவது, ரூ. 9,000 கோடி வரை இருக்கும்.

English summary
Close on the heels of the IT department going public with the information that the financial documents worth five billion US dollars seized from TM Ramalingam were forged, an interim anticipatory bail application was filed on his behalf in Madras high court today. According to Feroz Khan, Ramalingam's legal counsel, Justice MM Sundaresh of Chennai high court heard the application and granted interim anticipatory bail to his client till January 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X