For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிகினி உடை போட்டியில் இளம் பெண்களை வென்று வாகை சூடிய 46 வயது பெண்!

By Chakra
Google Oneindia Tamil News

Carol Dunster
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த 'பீச் பேப்' பிகினி உடைப் போட்டியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை வென்று முதல் பரிசை தட்டிச் சென்றார் 46 வயதான 'ஆண்டியான' கரோல் டன்ஸ்டர்.

கார்ன்வெல் நகரில் நடந்த இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களிலேயே மூத்தவர் இவர் தான். மற்றவர்கள் அனைவருமே 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள்.

ஆனால், மிகச் சிறந்த உடலமைப்பு கொண்டிருந்த இவரையே சிறந்த நீச்சலுடை அழகியாக பொது மக்கள் தேர்வு செய்தனர்.

கார்ன்வெல் நகரைச் சேர்ந்த பைரேட் எப்எம் ரேடியோ இந்தப் போட்டியை நடத்தியது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது நீச்சலுடை புகைப்படங்களை ரேடியோவின் இணையத்தளத்தில் பதிவு செய்தனர்.

இதன் மீது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானவர்கள் கரோலையே தேர்வு செய்தனர்.

21 வயது, 23 வயதான இரு குழந்தைகளுக்கு தாயான இவர் டிரைவிங் ஸ்கூலில் பயிற்சியாளராக உள்ளார். 7 மாராதான் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் தனது பிட்டான உடலுக்கும் தோலுக்கும் காரணமாகச் சொல்வது கொஞ்சம் உடற் பயிற்சியும், நல்ல தூக்கமும், தோலுக்கு காட் லிவர் எண்ணெய்யை தேய்ப்பதையும் தான்.

வாழ்க்கையில் இவர் புகைப் பிடித்ததே இல்லையாம். தனது அழகுக்கு இதையும் ஒரு முக்கியக் காரணமாக சொல்கிறார் கரோல்.

English summary
A St Austell woman has proved that age is no barrier after scooping a 'beach babe' award – at the age of 46. Carol Dunster, from Roslyn Close in St Austell, said she was shocked to have been chosen for Pirate FM's 2012 Beach Babe Award
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X