For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100க்கு 102 மதிப்பெண்களைப் போட்ட டெல்லி பல்கலைக் கழகம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் கல்வித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு டெல்லி பல்கலைக் கழகம் வாரி வழங்கியிருக்கும் மதிப்பெண்களே சான்றாக இருக்கிறது... 100 மதிப்பெண்களுக்கு 102, 50 மதிப்பெண்களுக்கு 74 என்ற ரேஞ்சுக்கு மதிப்பெண்கள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக் கழக மாணவி ஒருவர் பிரெஞ்சு பாடத்தில் 102 மதிப்பெண்களை எடுத்து அதிர்ச்சியில் மூழ்கிப் போயிருக்கிறார். காரணம் என்ன தெரியுமா? மொத்த மதிப்பெண்களே 100 தான்!

இதேபோல் பிஎஸ்சி மாணவர்களுக்கு 50க்கு 65, 50க்கு 74 என்று மதிப்பெண்கள் போடப்பட்டிருக்கின்றன. கணிதத்தில் 55க்கு 57, இயற்பியலில் 38க்கு 58 என்றும் மதிப்பெண்கள் போடப்பட்டிருக்கிறது.

இப்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களுக்கும் கூடுதலாக மார்க்குகளை அள்ளிவீசியிருப்பதால் மேற்படிப்புக்குப் போக முடியாது என்ற நிலையில் இவர்கள் அனைவரும் மறுமதிப்பீடு செய்யக் கோரி வருகின்றனர்.

இதனால் டெல்லி பல்கலைக் கழகம் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

அடக்கொடுமையே!

English summary
When Delhi University student Nishi Sinha (name changed) got 102 marks in her second year French exam, she just couldn't trust her eyes. The reason for her disbelief was simple — the French paper carried total marks of 100!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X