For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடியில் தங்கப் பதக்கம்! கர்நாடகாவில் மடாதிபதியாக பொறுப்பேற்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Seer Nirmalanandanatha
மாண்டியா: கர்நாடகாவில் ஒக்கலிகா சமூகத்தினரின் ஆதிசுஞ்சனகிரியின் சிக்பல்லபூர் மடாதிபதியாக சென்னை ஐஐடியில் படித்து தங்கப் பதக்கம் வென்ற நிர்மலாந்தா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிகா சமுதாயத்தினரின் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் சிக்பல்லபூர் தலைவராக இருந்த பாலகங்காதரநாத சுவாமி கடந்த ஞாயிறன்று காலமானார். இந்த மடத்துக்கு ரூ5 ஆயிரம் கோடிக்க்ம் அதிகமான சொத்துகள் இருக்கிறது.

பாலகங்காதநாத சுவாமி மறைவுக்குப் பிறகு புதிய மடாதிபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. மறைந்த பாலகங்காதரசுவாமி எழுதிய உயில் தனியார் வங்கி லாக்கரில் இருந்தது. அதில் தும்கூர் மாவட்டத்தின் சீர்னஹள்ளியைச் சேர்ந்த நிர்மலானந்தாதான் அடுத்த மடாதிபதி என எழுதப்பட்டிருந்தது.

1969ஆம் ஆண்டு பிறந்த நிர்மலானந்தா, சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கப் பதக்கம் வென்றவர். தங்கப் பதக்கம் பெற்றிருந்தாலும் இப்போது மடாதிபதி என்ற பொறுப்பை ஏற்றுள்ளார்.

English summary
Seer Nirmalanandanatha, an MTech from IIT-Madras, heading the Chikkaballapur branch of Adichunchanagiri mutt, was anointed the 72nd head of the mutt and successor of seer Balagangadharanatha, on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X