For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 கிலோ தங்கக் கட்டி… புதையலை தேடிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Gold
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தில் உள்ள பலார்ட் அருகே புதர் ஒன்றில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளார் ஒரு நபர். இவர் புதையலை தேடிக்கொண்டிருந்த போது இந்த தங்கக்கட்டி சிக்கியுள்ளது.

பாலார்ட் நகருக்கு அருகே மெட்டல் டிடெக்டரின் உதவியுடன் புதையலை தேடிக் கொண்டிருந்தார் அந்த நபர். அப்போது தரைக்கு கீழே இரண்டடி ஆழத்தில் உலோக கட்டி இருந்ததால் பீப் என்ற ஒலி எழுந்தது.இதனையடுத்து அந்த இடத்தை தோண்டி பார்த்ததில், சுமார் ஐந்தரை கிலோ எடையுள்ள தங்க கட்டி கிடைத்தது, இதன் விலை 2 லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் சூடுபிடித்த தங்க வேட்டையின் போது, இந்த இடம் தங்கம் தேடுவோர் மத்தியில் பிரபலமாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகால தங்க தேடுதல் வேட்டையில் இப்போது கிடைத்துள்ள தங்கம்தான் மிகப்பெரிய புதையல் என்று கூறப்படுகிறது.

English summary
An amateur prospector has discovered a once-in-a-lifetime find in the most unlikely of places - finding a huge lump of gold worth £200,000 in the Australian bush. Using only a handheld detector, the unnamed novice was amazed when he found the y-shaped nugget 60cm underground near the town of Ballarat in Victoria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X