For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலில் கவர்னர், அடுத்து அதிபர்: ஒபாமாவின் அண்ணன் மாலிக் திட்டம்

By Siva
Google Oneindia Tamil News

Malik Obama
நைரோபி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாலிக் ஒபாமா கென்யாவில் உள்ள சியாயா கவுன்ட்டியின் ஆளுநர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாலிக் ஒபாமா(54). கென்யாவில் வசிக்கும் அவர் தனது சொந்த கவுன்ட்டியான சியாயாவின் ஆளுநர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அகௌண்டன்டான அவர் அரசியலுக்கு வர தனது தம்பி தான் காரணம் என்கிறார்.

இது குறித்து மாலிக் கூறுகையில்,

பாரக் ஒபாமாவின் சாதனைகள் தான் என்னை அரசியலுக்கு வர ஊக்கமளித்துள்ளன. கென்ய அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுகிறீர்களா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். முதலில் ஆளுநர் தேர்தலைப் பார்க்கலாம். அதில் வெற்றி பெற்றால் அதிபர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன். சியாயாவில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் ஊழலை ஒழிக்க பாடுபடுவேன் என்றார்.

பாரக் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வான போது மாலிக் அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது மாலிக்கை தேர்தலில் நிற்குமாறு ஒபாமா ஊக்கமளித்துள்ளனர். தனது தம்பி உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்தாலும் தேர்தலில் அவரிடம் இருந்து உதவி பெறப் போவதில்லை என்று மாலிக் தெரிவித்துள்ளார்.

ஒபாமா என்ற பெயரே மாலிக்கிற்கு பலமாக மாறியுள்ளது. அவர் கென்ய பிரதமர் ரைலா ஒடிங்காவின் தம்பியை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
US president Barack Obama's half brother Malik Obama is running for governor of Kenyan county Siaya. His rival candidate is Kenyan prime minister Raila Odinga's younger brother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X