For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதன் முறையாக 'மூச்சு முட்ட' ஆரம்பித்துள்ள சீன பொருளாதார வளர்ச்சி.. 7.8 சதவீதமாக சரிந்தது!

By Chakra
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக மூச்சு முட்ட ஆரம்பித்துள்ளது.

இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்த சீனாவின் பொருளாதாரம் முதல் முறையாக மிகக் குறைந்த அளவான 7.8 சதவீத வளர்ச்சிக்கு சரிந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2011ல் 9.3 சதவீதமானது. இந் நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவீதத்துக்கு வந்துள்ளது.

சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல அமெரிக்க, ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்களே இயங்கி வருகின்றன. இந் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் தொடர் பொருளாதார மந்தம் காரணமாக சீனாவின் இறக்குமதியை அவை பெருமளவு குறைத்துவிட்டன.

இதனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடி வாங்க ஆரம்பித்துள்ளது.

English summary
Chinese economy grew at its slowest pace in 13 years posting 7.8 percent year-on-year growth in 2012 amid external jitters and domestic woes. Data released by the National Bureau of Statistics showed that the growth rate, the weakest expansion in 13 years, was down from 9.3 percent in 2011 and 10.4 percent in 2010. The economy's fourth-quarter growth quickened to 7.9 percent on government pro-growth measures. The rate ended a seven-straight-quarter slowdown, according to the data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X