For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்பன் பாலம் சேதமடைந்த தூண் அகற்றம்… இன்று ரயில் சோதனை ஓட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Pamban bridge
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதியதில் சேதமடைந்த தூண் வெடி வைத்து தகர்த்து, அகற்றப்பட்டது. தற்போது தற்காலிக இரும்புத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட ரயில்பாலத்தில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படும் என ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பாம்பன் ரயில் பாலத்தில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 121 ஆவது தூண் சேதமடைந்தது. இதனையடுத்து அந்த தூணின் இரு புறமும் இரும்புத்துாண் அமைத்து கான்கிரீட் தூணை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் தொய்வு ஏற்பட்டதால் நேற்று வெடி வைத்து சேதமடைந்த தூண் அகற்றப்பபட்டது. அந்த துாணுக்கு பதிலாக தற்காலிகமாக இரும்புத்துாண் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாலத்தில் புதிய தண்டவாளமும் அமைக்கப்பட்டது.

இன்று சோதனை ஓட்டம்

இதனையடுத்து பாம்பன் ரயில்வே பாலத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.தண்டவாளத்தின் உறுதித் தன்மையை ஆராய்வதற்காக இந்த சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் ரயில்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாறையில் மோதிய இழுவைக் கப்பலை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து கப்பல் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
A trail run has been planed in repaired Pamban rail bridge today. The bridge was damaged after a ship crossed in to on January 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X