For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க விமானத்தை கடத்துவதாக தொலைபேசி மிரட்டல்: போர் விமானங்கள் பத்திரமாக தரை இறக்கின!

By Chakra
Google Oneindia Tamil News

Alaska Airlines
சியாட்டில்: ஹவாய் தீவுகளில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தைக் கடத்த முயற்சி நடப்பதாக வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பையடுத்து, அந்த விமானத்தை அமெரிக்க போர் விமானங்கள் சூழ்ந்து கொண்டு தரையிறக்கின.

ஆனால், இந்த தொலைபேசி மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் இன்று ஹவாய் தீவின் கோனா நகரில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி பறந்து கொண்டிருந்தபோது ஹவாய் தலைநகர் ஹோனலூலுவில் உள்ள எப்பிஐ அலுவலகத்துக்கு இந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், விமானத்தில் ஒரு கடத்தல்காரன் இருப்பதாகவும், விமானம் கடத்தப்பட இருப்பதாகவும் எச்சரித்தார்.

இதையடுத்து ஓரேகான் விமானப் படைத் தளத்திலிருந்து கிளம்பிய இரு எப்-15 ரக போர் விமானங்கள் அந்த விமானத்தை சூழ்ந்து கொண்டு, சியாட்டிலின் டகோமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கின.

விமான பயணிகள் அனைவரும் சோதனையிடப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு நபர் மீது சந்தேகம் வந்ததால் அவரிடம் நீண்ட விசாரணை நடந்தது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை.

அந்த விமானத்தில் கடத்தல்காரர்களோ அல்லது துப்பாக்கியோ வெடிகுண்டுகளோ சிக்கவில்லை. இதனால் யாரும் கைது செய்யப்படவும் இல்லை என எப்பிஐ தெரிவித்துள்ளது.

இந் நிலையில் எப்பிஐக்கு மிரட்டல் விடுத்த அந்த ஹவாய் தீவு நபரைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன.

English summary
Military jets scrambled Thursday night and escorted a flight from Hawaii to Seattle after receiving a hoax call that there was a hijacker aboard. The FBI interviewed one of the passengers aboard the Alaska Airlines flight from Kona, Hawaii, but no arrest was expected, officials told reporters. The incident was being investigated as a hoax, FBI spokesman Tom Simon in Honolulu told reporters there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X