For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜில்லிட வைக்கும் ஐஸ் நீரில் புனிதக் குளியல் ...!

Google Oneindia Tamil News

Holy Bath
வைஷ்கொராட்: ஆத்ம சுத்திக்ககாவும், மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் கரைந்து ஓடி புதுப்பிக்கப்பட்ட மனிதனாக வேண்டும் என்பதற்காகவும் முன்னாள் சோவியத் நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜில்லிட வைக்கும் ஐஸ் நீரில் புனித நீராடும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு நடுநடுங்கியபடி குளியலைப் போட்டனர்.

இயேசுநாதர் கடவுளாக, புனிதராக பிரகடனப்படுத்தப்பட்ட நாளை மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இவ்வாறு கொண்டாடுகின்றனர். புனித நாளாக இதை அனுசரிக்கின்றனர். இந்தநாளில் புனித நீராடுவது அங்கு வழக்கம். அதிலும் சாதாரண நீரில் அல்ல, ஜில்லிட வைக்கும் ஐஸ் நீரில் புனித நீராடுவார்கள்.

உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளில் ஜனவரி 19ம் தேதி இந்த நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. பிற நாடுகளில் வேறு தேதியில் நடைபெறுவது வழக்கம்.

உக்ரைனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆண்கள், பெண்கள், சிறார்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு நடுநடுங்கியபடி ஐஸ் நீரில் குளியல் போட்டனர்.

இதற்காக பனிக்கட்டிப் பிரதேசப் பகுதியில் சிலுவை வடிவிலான குளம் வெட்டப்பட்டிருந்தது. அதில் இறங்கி அப்படியே ஒரு முழுக்குப் போட்டு விட்டு அடுத்த பகுதி வழியாக வெளியேறி விட வேண்டும். முழுக்குப் போடுவதற்காக ஐஸ் நீரில் இறங்குவதற்கு முன்பு பாதிரியார் ஒருவர் அவர்களை ஆசிர்வதிப்பார்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வைஷ்கொராட் பகுதியில் உள்ள நிப்ரோ ஆற்றுப் பகுதியில் இந்த புனித நீராடல் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டும் பெரும் திராளானோர் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். ஆண்கள் வெற்று உடலுடனும், பெண்கள் பிகினி உடையிலும் வந்து புனித நீராடினர்.

English summary
A boy gets into an ice hole in the Dnipro River, as others wait for their turn, as part of celebration of the Epiphany in the town of Vyshgorod outside the capital Kiev, Ukraine, Saturday, Jan. 19, 2013. Orthodox believers celebrate the holiday of the Epiphany on Jan. 19, and traditionally bathe in holes cut through thick ice on rivers and ponds to cleanse themselves with water deemed holy for the day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X