For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 4,000 கோடி ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்: அனில் பஸ்டால்வாடே இந்தோனேஷியாவில் கைது

By Chakra
Google Oneindia Tamil News

Anil Bastawade
ஜகார்தா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ரூ. 4,000 கோடி நிலக்கரி சுரங்க ஊழலில் முக்கிய குற்றவாளியான அனில் பஸ்டால்வாடே இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவின் இந்த ஊழலில் மிக முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அனில் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இவருக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் சிபிஐ சர்வதேச ரெட்கார்னர் நோட்டீஸை பிறப்பித்தது.

இதையடுத்து இந்தோனேஷியாவில் ஒரு தீவில் மாபெரும் மாளிகையில் வசித்து வந்த அனிலை அந்நாட்டு போலீசார் கைது செய்து, இந்திய அரசுக்கு தகவல் தந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்தோனேஷியா விரைகின்றனர்.

English summary
Anil Bastawade who was responsible behind the Rs 4000-crore coal scam was detained by Indonesian government. Anil Bastawade, a key aide of former Chief Minister Madhu Koda, allegedly laundered away thousands of crores of Madhu Koda's ill-gotten wealth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X