For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பா பேசுவதைக் கேட்டு ஒபாமா மகள் விட்ட பெரிய்ய்ய்ய கொட்டாவி..!

Google Oneindia Tamil News

Sasha
நியூயார்க்: லட்சக்கணக்கானோர் அதிபர் பராக் ஒபாமா பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது மகள் சாஷா, பெரிய்ய்ய சைஸ் கொட்டாவி விட்டு போட்டோவில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இன்டர்நெட்டில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

2வது முறையாக அதிபராகியுள்ளார் ஒபாமா. அவரது பதவியேற்பு விழா வாஷிங்டனில் நடந்தது. பிரமாண்டமாகநடந்த இந்த பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது தனது அதிபர் உரையை ஆற்றினார் ஒபாமா.

அத்தனை பேரும் ஒபாமா என்ன சொல்கிறார் என்பதை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவரது 11 வயது இளைய மகள் சாஷா பெரிய்ய கொட்டாவி விட்டபடி காட்சியளித்தார். இதைப் பார்த்த சிலர் புகைப்படமாக அதை எடுத்து விட்டனர். உடனடியாக இன்டர்நெட்டிலும் இதைப் போட்டு விட்டனர். இப்போது இது காட்டுத் தீ போல பரவி வருகிறதாம்.

ஆரம்பத்தில் அமைதியாக தனது தந்தை பேசுவதைக்கேட்டுக் கொண்டிருந்தார் சாஷா. ஆனால் ஒரு கட்டத்தில் கைகளைத் தட்டியபடி அவர் கொட்டாவி விட ஆரம்பித்தார்.

அமெரிக்காவில் தற்போது எங்கு பார்த்தாலும் சாஷா கொட்டாவி விட்ட கதையைத்தான் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

மேலும் பலர் சாஷா விட்ட கொட்டாவியைக் கிண்டலடித்து பேஸ்புக், டிவிட்டர்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒபாமா, அவரது மகளுக்கே போரடித்து விட்டார் என்றும் நக்கலடித்துள்ளனர்.

ஒபாமா தனது பேச்சை முடித்து விட்டு திரும்பியபோது சாஷா அவரை நெருங்கி, நல்லாப் பேசுனீங்கப்பா, எங்களை ஏமாற்றவில்லை என்று கூறி வாழ்த்தியது தனிக் கதை.

English summary
While millions of eyes were trained on her Big Daddy as he delivered his inauguration speech, the young Sasha Obama was briefly caught on the wrong foot - giving out a big yawn in the middle of the address - an image that has now gone viral on social networking sites. All of 11, the youngest Obama sat through the President's nearly 20 minutes address with her 14-year-old elder sister Malia and their mother Michelle, clapping and cheering in between the address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X