For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2013ல் உலக அளவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 22 கோடியைத் தாண்டும்: அதிர்ச்சி தகவல்

By Siva
Google Oneindia Tamil News

ஜெனீவா: உலக அளவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 22 கோடியைத் தாண்டும் என்று சர்வதேச தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலக அளவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் 3 மில்லயன் அதிகரிக்கும். கடந்த ஆண்டு இறுதியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 197 மில்லியனாக இருந்தது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 5.1 மில்லியன் அதிகரித்து 202 மில்லியனைத் தாண்டும். வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதால் இதுவரை 39 மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர்.

கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பின்மையின் தாக்கம் அதிகம் இருக்கும். பொருளாதார மந்தநிலையால் ஐரோப்பா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 73.8 மில்லியன் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 2014ல் 5 லட்சம் அதிகரிக்கும். 2012ல் 12.6 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்த சதவீதம் வரும் 2017ல் 12.9 ஆக அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Geneva based The International Labour Organization warned that the number of unemployed worldwide is projected to rise by 5.1 million this year to more than 202 million.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X