For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: இறுதிப் போரில் காணாமல்போனோர் பற்றி ”இந்தியாதான்” பதில் சொல்ல வேண்டும்: கோத்தபாய புதுகுண்டு!

By Mathi
Google Oneindia Tamil News

Gotabaya Rajpaksa
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது காணாமல்போனவர்கள் பற்றி போர் முனையில் இருந்த இந்திய மருத்துவமனைகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்பில் இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று கோத்தபாயவிடம் ஒப்படைக்கப்பட்டது,

இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கோத்தபாய, இறுதி யுத்தத்தின் போது இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்களை முதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய மருத்துவமனைகளும்தான் பொறுப்பேற்றன. பின்னர்தான் அவர்கள் இலங்கை ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்படி இலங்கை ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவர் பற்றிய விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எவரும் காணாமல் போகவில்லை.

இறுதி யுத்தத்தில் காணாமல் போயிருந்தோர் எனில் அதற்கு இந்திய மருத்துவமனைகளும் செஞ்சிலுவை சங்கமும்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இலங்கை அல்ல என்றார்.

English summary
Sri Lanka Defence Secretary Gotabaya Rajpaksa today dismissed reports that persons had disappeared in the north during the conflict
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X