For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்ணையிலிருந்து தப்பி ஓடிய 15,000 முதலைகள்... ராணுவத்தை விட்டு தேடுகிறார்கள்!

Google Oneindia Tamil News

ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ரக்வேனா முதலைப் பண்ணையிலிருந்து 15,000 முதலைகள் வெளியே தப்பி ஓடி விட்டன. இதையடுத்து அவற்றைப் பிடிக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

ரக்வேனா பகுதியில் தற்போது பயங்கர மழை பெய்து வருவதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரக்வேனா முதலைப் பண்ணையில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி அங்கிருந்த முதலைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துக் கொண்டு போய் விட்டன. கிட்டத்தட்ட 15,000 முதலைகள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில முதலைகள் மீண்டும் பிடிக்கப்பட்டு விட்டன. ஆனால் பல ஆயிரக்கணக்கான முதலைகள் இன்னும் பிடிபடவில்லை. பல முதலைகள் அருகில் உள்ள பள்ளிக்கூடம், ரக்பி மைதானம் ஆகியவற்றுக்குள் புகுந்துள்ளன.

இதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதலைகளைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

English summary
South Africa's army and police were called in today to rescue residents from thousands of crocodiles that escaped from a farm whose floodgates were opened due to torrential rains. Around 15,000 predators sprung from the Rakwena Crocodile Farm in the far north of the country when owners were forced to open the gates to prevent a storm surge, local daily Beeld reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X