For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாரணைக்கு ஒத்துழைக்கலைனா ஹெட்லி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம்: அமெரிக்கா

By Siva
Google Oneindia Tamil News

Headley
சிகாகோ: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியான டேவிட் ஹெட்லி அமெரிக்கா மற்றும் இதர நாட்டு அரசுகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போனால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா தயாராக இல்லை.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர்(பொறுப்பு) கேரி எஸ் ஷாப்ரியோ கூறுகையில்,

நாடு கடத்தப்படக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் செய்த ஒப்பந்தத்தை ஹெட்லி மீறக் கூடாது. அந்த ஒப்பந்தத்தின்படி அவர் அமெரிக்கா மற்றும் பிற நாட்டு அரசுகளின் விசாரணைக்கு ஒத்தழைக்க வேண்டும். அவர் ஒத்துழைப்பு தரும் வரை தான் நாடு கடத்தப்பட மாட்டார். மாறாக அவர் ஒத்துழைக்க மறுத்தாலோ, பொய்யான தகவலை அளித்தாலோ, நேர்மையில்லாமல் நடந்தாலோ ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். அதன் பிறகு இந்தியாவுடன் செய்யப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற உடன்படிக்கையை பரிசீலிக்க வேண்டி இருக்கும் என்றார்.

அதாவது ஹெட்லி ஒப்பந்தத்தை மீறினால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம்.

English summary
There is still some possibility of extraditing Pakistani-American LeT terrorist David Headley to India, if the Mumbai terror attacks convict violates his plea agreement, a US federal Attorney has indicated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X