For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நிலவரம்- டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட சந்திரிகாவுடன் முக்கிய ஆலோசனை

By Mathi
Google Oneindia Tamil News

Chandrika Kumaratunka
டெல்லி: இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அண்மையில் டெல்லியில் முகாமிட்டு முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மார்ச் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்திரிகாவை டெல்லிக்கு வரவழைத்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

டெல்லியில் முகாமிட்டிருந்த அவர், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

சந்திரிகா குமாரதுங்கவின் டெல்லி பயணமும் இந்திய அரசுடனான ஆலோசனைக் கூட்டமும் இலங்கை அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
Sri Lanka former President Chandrika Kumaratunka met Foreign Minister Salman Kurshid in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X