For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மிஸ்ட் கால்’களால் மிச்சமாகும் ரூ. 500 கோடி!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பல ஆயிரம் செலவு செய்து செல்போன் வாங்கியவர்கள் கூட மிஸ்டு கால் கொடுத்து வெறுப்பேற்றுவார்கள். இந்த மிஸ்டு கால் கண்டுபிடிச்சவனை கட்டி வச்சு உதைக்கணும் என்பார்கள் மிஸ்டு கால் பார்த்து வெறுப்படைந்தவர்கள்.

காதலிக்கும் போது மிஸ்டு கால் கொடுத்தால் அடுத்த நிமிடமே போன் பேசும் காதலர்கள், கணவர்களாக மாறிய பின்னர் மனைவி போன் செய்தால் அதை டைவர்ட் பண்ணி விடுவார்கள்.

பசங்க எத்தனை கால் பண்ணினாலும் பொண்ணுங்க பண்ற ஒரே கால் மிஸ்டு என்பார்கள். இப்படி மிஸ்டு கால் பற்றி எத்தனையோ ஜோக்குகள் வந்திருக்கின்றன. நீங்கள் மிஸ்டு கால் கொடுப்பவரா? இனி வெட்கப்பட வேண்டாம் காலரை தூக்கி விட்டுக்கொள்ளுங்கள்.

ஏனெனில் இந்தியாவில் மிஸ்டு கால் கொடுப்பதால் ஆண்டுக்கு 500 கோடி அளவுக்கு மிச்சம் ஆகிறது என்று ஒரு சர்வே தெரிவித்துள்ளது. இனி மேல் மிஸ்டு கால் கொடுப்பவர்களை கிண்டல் செய்யவேண்டாம் என்கிறது அந்த சர்வே.

மிஸ்டு கால் மன்னர்கள்

மிஸ்டு கால் மன்னர்கள்

இந்தியாவில் பிரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் 96 சதவீதம் பேர் மிஸ்டு கால்தான் விடுவார்கள். ஷாப்பிங் முடித்து விட்டு, கார் டிரைவரையோ, கணவரையோ அழைக்க ஒரு மிஸ்டு கால் கொடுப்பார்கள். சிக்கனமான சில பெற்றோரும் உண்டு. பிள்ளைகள் டியூசனுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மிஸ்டு கால். அங்கிருந்து மீண்டும் புறப்படும் போதும் மிஸ்டு கால் என மிஸ்டு கால் மன்னர்கள்தான் இன்றைக்கு அதிகம் இருக்கின்றனர்.

பணம் மிச்சமாகிறது

பணம் மிச்சமாகிறது

இந்த மிஸ்டு கால் பழக்கத்தை வங்கிகள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள், உணவு விடுதிகள், அரசியல் கட்சிகளும் பயன்படுத்தி ஏராளமான பணத்தை மிச்சப்படுத்துகின்றன.

கணக்கை தெரிஞ்சுக்கலாம்

கணக்கை தெரிஞ்சுக்கலாம்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு பற்றி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. மற்றொரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மினி&ஸ்டேட்மென்ட் கிடைக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இதே போன்ற சேவையை வழங்குகின்றன.

ஊழலுக்கு எதிராக மிஸ்டு கால்

ஊழலுக்கு எதிராக மிஸ்டு கால்

சமீபத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 180 நாட்களில் 2.5 கோடி பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.

வாடிக்கையாளர் தொடர்புக்கு

வாடிக்கையாளர் தொடர்புக்கு

ஹிந்துஸ்தான் யூனி லீவர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், "மிஸ்ட் கால்' மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.

சந்தா புதுப்பிக்கலாம்

சந்தா புதுப்பிக்கலாம்

மராத்தி நாளிதழ் தனது சந்தாதாரர்களை, ‘ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், சந்தா புதுப்பிக்கப்படும்' என்று அறிவித்துள்ளது. அதே போல், மிஸ்டு கால் கொடுத்தால் எந்தெந்த தியேட்டர்களில் எந்த திரைப்படம் ஓடுகிறது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கின்றன.

ரூ. 500 கோடி வருமானம்

ரூ. 500 கோடி வருமானம்

இந்த மிஸ்டு கால் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சில கோடி ரூபாய் அளவிற்கு இருந்த வர்த்தகம் தற்போது, 500 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
For, the Great Indian Missed Call the weapon of choice for perpetually broke pre-paid users like students and migrant laborers is turning out to be a Rs.500 crore business opportunity for banks, FMCG majors, even political parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X