For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பங்க்குகளில் அரசு பேருந்துகளுக்கு டீசல்- வாகன ஓட்டிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ஐ.ஓ.சி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: டீசலுக்கு இரட்டை விலையை மத்திய அரசு நிர்ணயித்ததைத் தொடர்ந்து தனியார் பங்குகளில் அரசுப் பேருந்துகள் டீசலை நிரப்பி வருகின்றன. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் ஏற்படாது என்று ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது.

தனியார் பங்க்குகளில் டீசல் ஒரு விலையும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் விலையுமாக இரட்டை விலையை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்திருந்தது.

மேலும் டீசல் விலையை குறைக்கும் வரை தனியார் பங்க்குகளில் டீசல் நிரப்பவும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தனியார் பங்க்குகளில் கியூவில் நின்று அரசுப் பேருந்துகளும் டீசலை நிரப்பி செல்கின்றன. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

ஆனால் கையிருப்பு போதுமான அளவு இருப்பதால் எந்த வித தடுப்ப்பாடும் வராது என்று ஐஓசி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
Faced with the proposition of catering to an unusual customer — the Metropolitan Transport Corporation (MTC) — a few retail fuel stations in the city are sourcing additional diesel to meet the fuel requirement of the MTC fleets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X