For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீ காபி... டீ காபி... ஆப்கானிஸ்தானில் ஹாரி செய்த வேலையைப் பாருங்க!

Google Oneindia Tamil News

லண்டன்: ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தில் பைலட்டாக இடம் பெற்றுள்ள இளவரசர் ஹாரி, அங்கு சக வீரர்களுக்கு டீ காபி வாங்கிக் கொடுத்த சுவாரஸ்யம் நடந்துள்ளதாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளிலெல்லாம் கட்டாய ராணுவ சேவை உண்டு. அந்த அடிப்படையில், இங்கிலாந்து விமானப்படையில் பைலட்டாக இருப்பவர் இளவரசர் ஹாரி.

இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பட்டத்து இளவரசர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் ஹாரிக்கு ஆப்கானிஸ்தானில் நல்ல சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைய ஏற்பட்டுள்ளாம்.

உக்கர்ஸ் அனுபவம்

உக்கர்ஸ் அனுபவம்

உக்கர்ஸ் என்ற விளையாட்டு இங்கிலாந்தில் பிரபலமானது. அதாவது நம்ம ஊர் செஸ் போல, தாயம் போல இந்த விளையாட்டு. இந்த விளையாட்டால்தான் பல சுவாரஸ்யங்களை சந்தித்தாராம் ஹாரி.

தோற்றால் டீ வாங்கித் தரணும்

தோற்றால் டீ வாங்கித் தரணும்

நம்ம ஊரில் மச்சான் ரெண்டு பேரும் கில்லி ஆடுவோம், தோத்தா நீ சரக்கு வாங்கித்தா, நான் தோத்தா நான் வாங்கித் தரேன் பந்தயம் கட்டுவார்கள் இல்லையா.. அதுபோல உக்கர்ஸ் ஆட்டத்தை வைத்து ஆப்கானிஸ்தானில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் நிறையப் பந்தயம் கட்டுவார்களாம். தோற்றால் அன்று பூராவும் தோற்றவர் மற்றவர்களுக்கு டீ வாங்கிக் கொண்டு வர வேண்டுமாம்.

நானும் வாங்கித் தந்தேன்... ஹாரி

நானும் வாங்கித் தந்தேன்... ஹாரி

இதுகுறித்து ஹாரி கூறுகையில் உக்கர்ஸ் ஆட்டத்தில் யார் தோற்றாலும் சரி, மற்றவர்களுக்கு அன்று பூராவும் டீ வாங்கித் தர வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் போய் வாங்கி வர வேண்டும். நானும் அப்படி டீ பாயாக இருந்துள்ளேன் என்றார் சிரித்தபடி.

நல்லா பொழுது போகும்

நல்லா பொழுது போகும்

கிட்டத்தட்ட வனாந்திரமான பகுதியில்தான் ஹாரிக்கு பணியாம். இதனால் அங்கு பெரும்பாலான நேரம் போரடிக்கும். அப்போது இந்த உக்கர்ஸ் ஆட்டம்தான் அவர்களுக்கு பொழுதைக் கழிக்க கை கொடுக்குமாம். கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஒவ்வொரு வீரரும் பணியில் இருக்க வேண்டும். 12 மணிநேரம்தான் ஓய்வாம்.

காலி வெடிகுண்டுப் பெட்டிகள் மீது உட்கார்ந்து

காலி வெடிகுண்டுப் பெட்டிகள் மீது உட்கார்ந்து

வீரர்கள் தங்கியுள்ள டெண்ட்டுகளில் போய்ப் பார்த்தால், காமெடியாக இருக்கும். காலி வெடிகுண்டுப் பெட்டிகளை அடுக்கி வைத்து அதன் மேல் உட்கார்ந்து உக்கர்ஸ் ஆடுவார்களாம்.

அபோகாலிப்ஸ் பார்ப்பார்கள்...

அபோகாலிப்ஸ் பார்ப்பார்கள்...

இதுபோக மேலும் போரடித்தால் அபோகாலிப்ஸ், பிளாக் ஹாக் டான், பிளாட்டூன் போன்ற படங்களைப் போட்டு வீரத்தை முறுக்கேற்றிக் கொள்வார்களாம்.

நீ காபி கொடு... நான் கிட் கேட்ஸ் தர்றேன்...

நீ காபி கொடு... நான் கிட் கேட்ஸ் தர்றேன்...

அமெக்க வீரர்களிடம் அட்டகாசமான சுவை கொண்ட காபியும், சாக்லேட்டும் நிறைய இருக்குமாம். இது இங்கிலாந்து வீரர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். இதனால் காபி, சாக்லேட்டை அமெரிக்கர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்குப் பதில் தங்கள் பக்கம் விசேஷமான கிட் கேட்ஸ், ரைஸ் கிறிஸ்பிஸ் ஆகியவற்றைக் கொடுத்து பரிமாறிக் கொள்வார்களாம்.

சண்டைக்களத்திலும் இப்படி சின்னச் சின்ன ஜாலி இருக்கத்தான் செய்கிறது போல...!

English summary
Prince Harry, third in line to the British throne, had to double up as a 'tea boy' to his fellow soldiers in Afghanistan where he was deployed as a helicopter pilot. The 28-year-old Prince Harry who has just returned from a 20-week tour of duty in the war zone in Helmand province as an Apache helicopter pilot, said he had to regularly double up as a tea boy for his colleagues after losing in a board game called Uckers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X