For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலிய சிறுவனை மன நோயாளியாக மாற்றிய ”ஆன்லைன் கேம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: பசித்தாலும் சாப்பிடுவதில்லை.... தூக்கம் தொலைத்து நாள்தோறும் 16 மணிநேரம் ஆன் லைன் கேமில் மூழ்கியிருந்த ஆஸ்திரேலிய சிறுவன் அதற்கு அடிமையாகிவிட்டான். இக்கட்டான நிலையில் இருந்து அந்த சிறுவனை மீட்கப் போராடி வருகிறார் ஒரு தாய்.

உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைனில் இந்த கேம் ஆடுவதாக கூறப்படுகிறது. இலவச ஆன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன்எஸ்கேப்'. மல்டிபிளேயர் ஆன்லைன் கேம் என்ற வரிசையில் ரன்எஸ்கேப், கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்ததுதான் இந்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது, விளையாட்டின் நோக்கம் என்ன, எந்த இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் கேமுக்குள் இருக்கும் ஆலோசகர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். இதுதான் இலக்கு என்று எதுவும் கிடையாது.எதை நோக்கி போவது, என்ன சாதிப்பது என்பது நம் விருப்பம்தான். ஆகமொத்தம், உள்ளுக்குள் ஒரு உலகமே இருக்கும்.

அடிமையான ஆஸ்திரேலியா சிறுவன்

அடிமையான ஆஸ்திரேலியா சிறுவன்

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த கேம், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்த சாம் என்ற டீன்ஏஜ் சிறுவனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. தினமும் 16 மணி நேரம் வீடியோகேமில் மூழ்கிக் கிடந்து அதற்கு அடிமையாகி மாறிப்போயிருக்கிறான் அந்த சிறுவன்.

தன் மகன் ஒரு வேளை கூட சாப்பிடுவதில்லை மற்றும் தூங்குவதே இல்லை என்று ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த கரென் கண்ணீருடன் கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட சாம் சுறுசுறுப்பான, துடிப்பான சிறுவன்தான். நன்கு படிப்பான். நண்பர்களுடன் டீமாக சேர்ந்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஆன் லைன் கேம்

ஆன் லைன் கேம்

ஆனால் 2010-ம் ஆண்டில் அவனது போக்கு திடீரென மாறியது. பள்ளியில் இருந்து நின்றுவிட்டான். தொழில்நுட்ப கல்வியையும் நிறுத்தினான். நண்பர்கள் என்றால் அவனுக்கு ரொம்ப இஷ்டம். ஆனால், படிப்படியாக நண்பர்களுடன் பேசுவது, விளையாடுவதைக்கூட நிறுத்திவிட்டான். குடும்பத்திலும் அவ்வளவாக ஒட்டுவதில்லை. எந்நேரமும் ரன்எஸ்கேப் கேமிலேயே மூழ்கிக் கிடந்தான்.

அதாவது, வெளியில் இருக்கும் நிஜ உலகத்தை மறந்து போலியான கிராபிக்ஸ் உலகிலேயே வாழ ஆரம்பித்தான். வீட்டில் நான் திட்டுவேன் என்பதால் இன்டர்நெட் மையத்தில் விளையாடியிருக்கிறான்.

ரூ. 22 ஆயிரம் செலவு

ரூ. 22 ஆயிரம் செலவு

2 வாரத்துக்கு ரன்எஸ்கேப் கேமுக்காக 22 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவிட்டிருக்கிறான் அந்த சிறுவன். கிட்டத்தட்ட ஒரு குடிகாரன் போல சாப்பிடாமல், தூங்காமல், தலைவாராமல், கம்ப்யூட்டரே கதியென்று கிடந்தான்.

25 மணி நேரம் விளையாடினான்

25 மணி நேரம் விளையாடினான்

தினமும் 16 மணி நேரம் கேம் ஆடிய அந்த சிறுவன் ஒருமுறை நான்-ஸ்டாப்பாக 25 மணி நேரம் ஆடினான். அவனுக்கு ‘ஷிசோபெர்னியா' என்ற மனநல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பித்துப் பிடித்த சிறுவன்

பித்துப் பிடித்த சிறுவன்

போதை, மது போல வீடியோகேமுக்கு தன் மகன் அடிமையானது அந்த தாய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டாக்டர்களின் ஆலோசனையை கேட்டு படிப்படியாக அவனை மாற்றி வருகிறார்.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, வீட்டில் இருந்து முதல் வேலையாக கம்ப்யூட்டரை அகற்றியதை அடுத்து வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டான். திரைச்சீலைகளை கிழித்தான். வயர்களை கத்தரியால் கட் செய்தான்.

கண்காணிப்பில் சிறுவன்

கண்காணிப்பில் சிறுவன்

டாக்டர்கள் சொன்னது போல, வீட்டின் ஹாலில் கம்ப்யூட்டரை வைத்திருக்கிறார். குறிப்பிட்ட நேரம்தான் ஆடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சில நேரங்களில் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்துமாறு லாக் பொருத்தி இருக்கிறார். இப்போதெல்லாம் வேளாவேளைக்கு சாப்பிட்டு, போதிய நேரம் தூங்கிவிட்டு பிறகுதான் விளையாடுகிறானாம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் அந்த தாய்.

ஆரம்பத்திலேயே கவனிங்களேன்!

ஆரம்பத்திலேயே கவனிங்களேன்!

இதுபோல உலகமெங்கும் பல சிறுவர்கள், இளைஞர்கள் வீடியோகேமுக்கும் இன்டர்நெட் கேமுக்கும் அடிமையாகி வருகிறார்கள். அவர்களது பெற்றோர் ஆரம்பத்திலேயே உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் அந்த ஆஸ்திரேலிய தாய்.

English summary
My son is addicted to the internet Overuse of internet can be a mental illnessAussies turn backs on the beach, surf the net instead DEAN Muggleton has one thing to say to people who think internet and video game addiction isn’t a real problem: “It’s real, and it can ruin your life”.The 25-year-old from Coffs Harbour is one of scores of readers who flooded News Limited websites with comments yesterday, in response to the story of Karen, an Adelaide mother whose teenage son is so addicted to online game Runescape he was prepared to live on the streets to play it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X