விஸ்வரூபம்... திருப்பூரில் போஸ்டர்களால் பரபரப்பு
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஸ்வரூபம் பற்றிய தீர்ப்பு இடைக்கால தீர்ப்பு தான். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனு குறித்த தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
திருப்பூரில் போஸ்டர்களால் பரபரப்பு:
விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் எங்கும் ஓடாது என்று திருப்பூர் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.
விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் எங்கும் ஓடாது என்று திருப்பூர் நகரின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தமிழ்கத்தில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் இதுபோன்ற போஸ்டர்கள் திருப்பூர் நகரில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு தீர்ப்பளித்தது. தடை நீக்கப்பட்ட பிறகு இன்று காலையில் தமிழ்நாடு முழுவதும் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தியேட்டர்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சில முக்கிய நகரங்களில் விஸ்வரூபம் திரையிடப்படவிருந்த தியேட்டர்களில் தாக்குதல் நடைபெற்றது. இதற்கும் அந்த போஸ்டருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications