For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவியிடம் ஆபாச பேச்சு: பாளை. கல்லூரி முதல்வர் கார் உடைப்பு, வகுப்புகள் புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: பாளையங்கோட்டையில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முதல்வரின் காரை அடித்து நொறுக்கினர்.

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவர் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தார். விடுப்பு முடிந்து கல்லூரிக்கு வந்த அவரிடம் கல்லூரி முதல்வர் ஆபாசமாக பேசியதாக மாணவி குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் சக மாணவர்களிடம் தெரிவித்தார்.

முதல்வரின் ஆபாச பேச்சை கண்டித்து மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் காரை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 3ம் ஆண்டு வரலாறு பிரிவு மாணவர்கள் நெல்லை கலெக்டர் அலுலவகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், மாணவியிடம் பாலியல் ரீதியாக பேசிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்வபத்தை நேரில் பார்த்த மாணவர் அருண் என்பவரை முதல்வர் கல்லூரியை விட்டு நீக்கியுள்ளார். அவரை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றார்.

English summary
Palayamkottai John's college principal interacted with a girl student in an indescent manner. So, students attacked his car and urged the Tirunelveli collector to take action against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X