For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார், வாகன, வீடு லோன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது

By Siva
Google Oneindia Tamil News

Loans to get cheaper
பெங்களூர்: கடனுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.50 வரை குறைத்துள்ளதையடுத்து வாகனம், வீடு மற்றும் கார்பரேட் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது.

ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 அளவுக்கு குறைத்தது. மேலும் ஒவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைத்திருக்க வேண்டிய பணத்தின் அளவையும் குறைத்துள்ளது. இதனால் வங்கிகளின் கையில் கூடுதலாக ரூ.18,000 கோடி இருக்கும். அதனால் வங்கிகள் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிக்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவையடுத்து பாரத ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.05 பாயிண்ட் குறைத்துள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 9.75 சதவிகிதத்தில் இருந்து 9.70 சதவீதமாக குறையும். இது வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதமும், ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து 0.75 சதவீதமும்குறைத்து நேற்று அறிவித்தது.

இரு சக்கர வாகன கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமும், காருக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதமும் குறைத்துள்ளது ஹெச்டிஎப்சி வங்கி. மேலும் வர்த்தக வாகன கடனுக்கான வட்டி விகிதமும் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 0.25 சதவீதம் குறையும் என்று அந்த வங்கி அறிவித்துள்ளது.

English summary
Auto, home and corporate loans will become cheaper with banks, led by market leader State Bank of India (SBI), lowering the lending rates by up to 0.50 percent in response to the easy money policy of the Reserve Bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X