For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!

By Mathi
Google Oneindia Tamil News

Columbia Crew
நியூயார்க்: பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது!

2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந் தேதியன்று இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இன்று கூட அமெரிக்காவில் கொலம்பியா விண்கல விபத்தில் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயணித்து மரணித்தோரின் 12 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 15 வயது சிறுவனும் 32 வயது இளைஞரும் அடக்கம்.

கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பியபோது, சிதறி விழுந்த ஒரு foam துண்டு தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விண்கலம் புறப்படும்போதே இந்த போம் துண்டு அதன் மீது விழுந்து, அந்த விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்திவிட்டது.

இதனால் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, ஏற்படும் மிக உயர் அழுத்த வெப்ப நிலையால் வெடித்துச் சிதறிவிடும் என்பது அப்போதே நாஸா விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துவிட்டது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான வெய்ன் ஹாலே தமது இணையதள பக்கத்தில் பக்கம் பக்கமாக விவரித்திருக்கிறார்.

அதில், கொலம்பியா விண்கலம் பழுதடைந்திருப்பது பற்றி நாங்கள் முன்னரே விவாதித்தோம். ஆனால் அதன் தெர்மல் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் பழுதை சீராக்க முடியாது என்று இயக்குநர் ஹான் ஹர்போல்ட் என்னிடம் கூறிவிட்டார். இந்தத் தகவல் விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்ககக் கூடாது என முடிவு செய்யப்பட்டது என ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார்.

அதாவது கொலம்பியா விண்கலத்தில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் நிச்சயம் அது வெடித்து சிதறிவிடும் என்பது நாசாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கின்றனர்.

இதனால் அந்த விண்கலத்தில் பயணித்த 7 பேரும் பூமிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறி பலியாயினர்.

English summary
NASA has revealed that the Columbia crew were not told that the shuttle had been damaged and they might not survive re-entry. The seven astronauts who died will be remembered at a public memorial service on the 10th anniversary of the disaster this Friday at Florida's Kennedy Space Center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X